Advertiment

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தின் துப்பாக்கிச் சூடு தாக்குதல்களில் 120-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 

by Admin

உலகம்
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தின் துப்பாக்கிச் சூடு தாக்குதல்களில் 120-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 

பாகிஸ்தானின் தென்மேற்குப் பகுதியான பலூசிஸ்தான் மாகாணத்தின் பல்வேறு இடங்களில் நடந்த தற்கொலை மற்றும் துப்பாக்கிச் சூடு தாக்குதல்களில் 120-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் ராணுவத்தின் தகவல்படி, இதில் 18 பொதுமக்கள், 15 பாதுகாப்புப் படையினர் மற்றும் பதிலடித் தாக்குதலில் கொல்லப்பட்ட 92 பயங்கரவாதிகள் அடங்குவர். சில தகவல்கள் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் எண்ணிக்க  145 வரை உயர்ந்ததாகக் கூறுகின்றன..இந்த ஒருங்கிணைந்த தாக்குதல்களுக்கு தடை செய்யப்பட்ட பலூசிஸ்தான் விடுதலை இராணுவம் பொறுப்பேற்றுள்ளது. இவர்கள்பிளாக்  ஸ்டார்ம் என்ற பெயரில்  இந்தத் தாக்குதல்களை நடத்தியதாகக் கூறியுள்ளனர்.குவெட்டா, குவாடர் , மஸ்துங் உள்ளிட்ட 12-க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில்  வன்முறை வெடித்தது. நெடுஞ்சாலைகள், காவல் நிலையங்கள், ரயில்வே தண்டவாளங்கள் மற்றும் அரசு முகாம்கள் இலக்காகக் கொள்ளப்பட்டன.
தாக்குதலைத் தொடர்ந்து  பலூசிஸ்தானில் பலத்த பாதுகாப்பு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பொதுக் கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், முகமூடி அணிந்து நடப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது

Share via

More Stories