Advertiment

லிபியாவின் முன்னாள் அதிபர் முஅம்மர் கடாபியின் மகன்நேற்று சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்.

by Admin

உலகம்
லிபியாவின் முன்னாள் அதிபர் முஅம்மர் கடாபியின் மகன்நேற்று சுட்டுக் கொல்லப்பட்டதாக   தகவல்.

லிபியாவின் முன்னாள் அதிபர் முஅம்மர் கடாபியின் மகன் சைஃப் அல்-இஸ்லாம் கடாபி நேற்று கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 லிபியாவின் மேற்குப் பகுதியில் உள்ள ஸின்டான் நகரில் உள்ள அவரது இல்லத்தில் நான்கு ஆயுதமேந்திய மர்ம நபர்கள் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

தாக்குதலுக்கு முன்னதாக அவர்கள் அங்கிருந்த கண்காணிப்புக் கேமராக்களைச் செயலிழக்கச் செய்ததாகவும், பின்னர் சைஃப் அல்-இஸ்லாம் கடாபியைச் சுட்டுக்கொன்றதாகவும் அவரது அரசியல் ஆலோசகர் மற்றும் வழக்கறிஞர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
 
இந்த படுகொலை குறித்து லிபிய அரசு  விசாரணையைத் தொடங்கியுள்ளது. இருப்பினும், இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

கடாபி குடும்பத்தின் அரசியல் வாரிசாகக் கருதப்பட்ட சைஃப் அல்-இஸ்லாம், 2011-ல் அவரது தந்தை கொல்லப்பட்ட பிறகு கடந்த 2021-ல் அதிபர் தேர்தலில் போட்டியிடவும் விருப்பம் தெரிவித்திருந்தார். 

Share via

More Stories