Advertiment

ஜெஃப்ரி  எப்ஸ்டீன்  தொடர்பான வழக்கில்முன்னாள்  அமெரிக்க  அதிபர் பில் கிளிண்டன் பிப்ரவரி, 27 ,அன்றும் நேரில் ஆஜராகி சாட்சியமளிக்க உள்ளனர்

by Admin

உலகம்
ஜெஃப்ரி  எப்ஸ்டீன்  தொடர்பான வழக்கில்முன்னாள்  அமெரிக்க  அதிபர் பில் கிளிண்டன் பிப்ரவரி, 27 ,அன்றும் நேரில் ஆஜராகி சாட்சியமளிக்க உள்ளனர்

முன்னாள்  அமெரிக்க  அதிபர் பில் கிளிண்டன் மற்றும் முன்னாள்  வெளியுறவுத்துறை அமைச்சர்  ஹிலாரி கிளிண்டன்  ஆகியோர் ஜெஃப்ரி  எப்ஸ்டீன்  தொடர்பான வழக்கில் வரும் பிப்ரவரி இறுதியில் சாட்சியமளிக்க ஒப்புக்கொண்டுள்ளனர்.  ஹிலாரி  கிளிண்டன்  பிப்ரவரி,  26 அன்றும், பில்  கிளிண்டன் பிப்ரவரி, 27 ,அன்றும் நேரில் ஆஜராகி சாட்சியமளிக்க உள்ளனர் .நாடாளுமன்றக் குழுவின்சம்மனை ஏற்க மறுத்ததற்காக அவர்கள் மீது  'நாடாளுமன்ற  அவமதிப்பு'  நடவடிக்கை   எடுக்கப்படும்  என்று  எச்சரிக்கப்பட்டது. இந்த  சட்ட  ரீதியான அழுத்தத்தைத் தொடர்ந்தே அவர்கள் சாட்சியமளிக்க சம்மதித்தனர்.இந்த விசாரணை ரகசியமாகநடத்தப்படும் என்றும்  , அது  வீடியோவில்  பதிவு  செய்யப்படும்  என்றும்  விசாரணைக் குழுத் தலைவர்  ஜேம்ஸ்  கோமர் தெரிவித்துள்ளார் .ஜெஃப்ரி எப்ஸ்டீன் மற்றும் அவரது கூட்டாளி  கிஸ்லைன் மேக்ஸ்வெல் ஆகியோரின் குற்றச் செயல்கள்  குறித்து கிளிண்டன்  தம்பதியருக்குத்  தெரிந்த தகவல்களை அறிந்துகொள்ள நாடாளுமன்றக் குழு இந்த  விசாரணையை  நடத்துகிறது

Share via