அமெரிக்காவின் ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கிப் போர்க்கப்பலை நோக்கி ஆக்ரோஷமாக வந்த ஈரானிய ட்ரோனை அமெரிக்கப் போர் விமானம் சுட்டு வீழ்த்தியுள்ளது. அமெரிக்க கடற்படையின் ஸ்டெல்த் போர் விமானம் இந்த ட்ரோனைச் சுட்டு வீழ்த்தியது. சுடப்பட்ட ட்ரோன் ஈரானின் 139 ரகத்தைச் சேர்ந்தது என அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த ட்ரோன் போர்க்கப்பலை நோக்கி ஆக்ரோஷமாக வந்ததாகவும், தற்காப்புக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அமெரிக்க மத்திய கட்டளை அமைப்பு தெரிவித்துள்ளது .ஈரானின் தெற்கு கடற்கரையிலிருந்து சுமார் 500 மைல் (800 கி.மீ) தொலைவில் அரபிக்கடல் பகுதியில் இது நிகழ்ந்தது. இந்தச் சம்பவத்தில் அமெரிக்க வீரர்களுக்கோ அல்லது உபகரணங்களுக்கோ எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே அணுசக்தி பேச்சுவார்த்தைகளுக்கான முயற்சிகள் நடந்து வரும் வேளையில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.