உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ரஷ்யா மீண்டும் ஒரு வான்வழித் தாக்குதலைத் தொடங்கியுள்ளது. 03,0 2 அதிகாலை உக்ரைன் மீது சுமார் 450 ஆளில்லா விமானங்கள் மற்றும் 71 ஏவுகணைகளை ரஷ்யா வீசியுள்ளது. இது 2026-ஆம் ஆண்டின் மிகப்பெரிய தாக்குதலாகக் கருதப்படுகிறது. தலைநகர் கீவ் ஜபோரிஜ்ஜியா கார்கிவ்,நிப்ரோ போன்ற முக்கிய நகரங்கள் கடுமையாகத் தாக்கப்பட்டன. உக்ரைனில் வெப்பநிலை -20°C முதல் -25°C வரை சரிந்துள்ள நிலையில் இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன. மின்சாரம் மற்றும் வெப்பமூட்டும் கட்டமைப்புகள் இலக்கு வைக்கப்பட்டதால், கீவ் நகரில் மட்டும் 1,100-க்கும் மேற்பட்ட குடியிருப்பு கட்டிடங்கள் வெப்ப வசதியின்றித் தவிக்கின்றன. அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் அபுதாபியில் நடைபெறவிருக்கும் இரண்டாம் கட்ட சமாதானப் பேச்சுவார்த்தைக்கு ஒரு நாள் முன்னதாக இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. முன்னதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விடுத்த கோரிக்கையின் பேரில் ரஷ்யா ஒரு வார கால தற்காலிக போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாகக் கூறப்பட்டது. ஆனால், அந்த இடைவெளி முடிவுக்கு வந்துள்ளதாகக் கூறி ரஷ்யா இத்தாக்குதலை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது. உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, ரஷ்யா அமைதியை விரும்பவில்லை என்றும், கடும் குளிரை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தி மக்களைத் துன்புறுத்துவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்