மணிப்பூரில் ஓராண்டு காலம் நீடித்த ஜனாதிபதி ஆட்சிக்குப் பிறகு,புது தில்லியில் நடைபெற்ற பா.ஜ.க சட்டமன்றக் கட்சி கூட்டத்தில் புதிய முதலமைச்சராக யும்னம் கெம்சந்த் சிங் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
62 வயதான இவர் இம்பால் மேற்கு மாவட்டத்தில் உள்ள சிங்ஜாமேய் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இதற்கு முன்பு மணிப்பூர் சட்டப்பேரவை சபாநாயகராகவும் (2017-2022), என். பிரேன் சிங் அமைச்சரவையில் அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
கடந்த 2025 பிப்ரவரி 13 முதல் மணிப்பூரில் அமலில் இருக்கும் ஜனாதி பதி ஆட்சி, இம்மாத 13-ஆம் தேதியுடன் முடிகிறது.
முன்னால் முதலமைச்சர் என். பிரேன் சிங்கிற்குப் பதிலாக கெம்சந்த் சிங் இந்தப் பொறுப்பை ஏற்கிறார். புதிய அமைச்சரவையில் இரண்டு துணை முதலமைச்சர்கள் நியமிக்கப்பட உள்ளனர். பாஜக-வின் நெம்சா கிப்ஜென்மற்றும் நாகா மக்கள் முன்னணியின் பிரதிநிதி ஒருவரும் இந்தப் பதவிகளை ஏற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யும்னம் கெம்சந்த் சிங் ஒரு சிறந்த டேக் வாண்டோ தற்காப்புக் கலை வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது. புதிய அரசின் முதன்மைப் பணியாக ,மணிப்பூரில் நிலவும் இன மோதல்களைத் தீர்த்து அமைதியை நிலைநாட்டுவதே ஆகும்.