மும்பையிலிருந்து கோயம்புத்தூர் செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானமும், ஹைதராபாத்திலிருந்து மும்பை வந்தடைந்த இண்டிகோ விமானமும் டாக்ஸிவேயில் மெதுவாகச் சென்றபோது அவற்றின் வலது இறக்கை முனைகள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன.மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
ஏா் இந்தியா,இண்டுகோ இரண்டு விமானங்களின் இறக்கைகளும் சேதமடைந்தன. எனினும், விமானத்திலிருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் என யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.
விபத்தைத் தொடர்ந்து இரண்டு விமானங்களும் தொழில்நுட்ப ஆய்விற்காக உடனடியாக சேவையிலிருந்து நிறுத்தப்பட்டு, பராமரிப்பு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டன.
இந்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம்இது குறித்து விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளது. மும்பை டிஜிசிஏ அதிகாரிகள் ஏற்கனவே விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்துள்ளனர்.
ஏா் இந்தியா,இண்டுகோ நிறுவனங்கள் பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்குவருத்தம் தெரிவித்துள்ளன. இண்டிகோ விமானத்தில் வந்த பயணிகள் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டனர்; ஏர் இந்தியா விமானப் பயணிகள் மாற்று விமானம் மூலம் கோயம்புத்தூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.