
காதலித்து திருமணம் செய்த மனைவி வரதட்சணை புகார் அளித்து மிரட்டியதாக 24 வயது இளைஞர் தற்கொலை செய்துகொண்டார். உத்திரபிரதேசம் மாநிலம் பரெய்லியைச் சேர்ந்த ராஜின் மீது மனைவி சிம்ரன் வரதட்சணை கொடுமை புகார் அளித்துள்ளார். இதனால் விரக்தியடைந்த ராஜ் தற்கொலை செய்துகொண்டார். இளைஞரின் தற்கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, இருவரும் சேர்ந்து எடுத்த இன்ஸ்டா ரீல்ஸ் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.