
வக்ஃபு வாரிய சட்டத்திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி நெல்லை மேலப்பாளையத்தில் இன்று (ஏப்.18) ஒருநாள் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. அனைத்து கட்சிகள், அமைப்புகள், ஜமாத்துகள் இணைந்து நடத்தும் இந்த போராட்டத்தில் பங்கேற்று, 1,000க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டுள்ளன. மேலும் 300-க்கும் மேற்பட்ட ஆட்டோகள், கார், வேன் உள்ளிட்ட சேவைகளும் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.