Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

குடும்பமே விஷம் குடித்து தற்கொலை

by Editor

தமிழகம்
குடும்பமே விஷம் குடித்து தற்கொலை

மதுரை, அனுப்பானடி, தாய் நகரை சேர்ந்தவர் ஜெயராமன். சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். மனைவி ஜீவகுமாரி. மகள் இன்பலட்சுமி (13), மகன் தனசிங்க பெருமாள் (10). கணவர் இறந்த பின்பு, ஜீவகுமாரி குடும்பம் நடத்த போதிய வருமானமின்றி பரிதவித்து வந்தார். வறுமை சூழல், கணவரை இழந்த விரக்தியால் தீவிர மன உளைச்சலில் இருந்து வந்தார். இவரது வீட்டில் நேற்று அதிகாலை வரை விடிய விடிய வெகு நேரம் மின்விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. 

இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, ஜீவகுமாரி, இன்பலட்சுமி, தனசிங்க பெருமாள் ஆகிய மூவரும் மயங்கிக் கிடந்தனர். மகன், மகளுக்கு விஷம் கொடுத்து, ஜீவகுமாரியும் விஷமருந்தி இருந்தது தெரிந்தது. வீட்டிற்குள் மயங்கிக் கிடந்த மூவரையும் மீட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். இதில் ஜீவகுமாரி, இன்பலட்சுமி வரும் வழியிலேயே உயிரிழந்தனர். மகன் தனசிங்கபெருமாள் மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடி வருகிறார். இதன்பேரில் கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிந்து, தாய், மகள் தற்கொலைக்கு குடும்ப வறுமை காரணமா? அல்லது வேறு காரணம் உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share via