
பாஜக மாநிலச்செயலாளர் கராத்தே தியாகராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பொன்முடியின் இந்த வாயால் திமுகவும் திமுக தலைவர்களும் சங்கடங்களை சந்தித்து வருவதாக தெரிவித்தார். இதே போல் 2012 சைதாப்பேட்டை இடைத்தேர்தலின் போது தேவை இல்லாமல் பொன்முடி வாயை விட்டார் என்றும், சைதாப்பேட்டை கோட்டூர்புரத்தில் அவர் வாயை உடைத்து அனுப்பியதாகவும் தெரிவித்த கராத்தே தியாகராஜன், இதையடுத்து என்னை அடித்துவிட்டார்கள் என்று அறிவாலயத்தில் கலைஞர் காலில் விழுந்தார் என விமர்சித்துள்ளார்.