
இஸ்ரேல் - ஹமாஸ் போர் நடவடிக்கைகளை புகைப்படங்களின் மூலம் உலகிற்கு காட்டிய காசாவைச் சேர்ந்த புகைப்பட பத்திரிகையாளர் ஃபாத்திமா ஹசௌனா (25) இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் உயிரிழந்தார். அவருக்கு இன்னும் சில நாட்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில், இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் அவரின் குடும்பத்தினர் 10 பேரும் உயிரிழந்துள்ளனர். "நான் ஒரு செய்தியாக இருக்க விரும்பவில்லை. எனது மரணம் உலகிற்கே கேட்கும்படி இருக்க வேண்டும்" என அவர் முன்னர் கூறியிருந்தார்.