
மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க.வின் முன்னாள் தலைவராக இருந்தவர் திலீப் கோஷ் (60). இவர், கட்சியின் பெண் உறுப்பினரான ரின்கு மஜும்தார் (51) என்பவரை நேற்று திருமணம் செய்து கொண்டார். கடந்த 2021-ம் ஆண்டு, ஈகோ பூங்காவில் நடைபயிற்சி மேற்கொண்டபோது இருவரும் ஒருவரையொருவர் சந்தித்து கொண்டபோது காதல் மலர்ந்துள்ளது. இந்நிலையில், இருவரும் திருமணம் செய்துள்ளனர். திலீப் கோஷுக்கு இது முதல் திருமணம் ஆகும். ரின்கு மஜும்தாருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு மகன் உள்ளார்.