
நேஷனல் ஹெரால்டு வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள நிலையில் இருவரும் பதவி விலக கோரி புதுச்சேரி பாஜக இளைஞரணி சார்பில் அண்ணா சாலை - காமராஜர் சாலை சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ராகுல், சோனியா புகைப்படத்தை எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து காங்கிரஸ் கட்சியை முற்றுகையிட முயன்ற பாஜக இளைஞரணியினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் போலீசாருக்கும், போராட்டகாரர்களுக்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது