
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வடக்குதிட்டங்குளம் கிராமத்தில் ஊராட்சி மன்றம் சார்பில் ஜல்ஜீவன் தி;ட்டத்தின் கீழ் தெருக்களில் வீடுகளின் முன்பு குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த சில தினங்களாக வீடுகளின் முன்பு போடப்பட்டு இருந்த குடிநீர் குழாய்களில் இருந்த நல்லிகள் திடீரென காணமால் போனது கண்டு பொது மக்கள் அதிர்ச்சியடைந்தன. அது மட்டுமின்றி தெருக்களில் போடப்பட்டிருந்த குடிநீர் குழாய்களிலும் நல்லிகள் காணாமல் போயிருந்தன.
100க்கும் மேற்பட்ட குடிநீர் குழாய் நல்லிகள் காணமால் போனது தெரியவந்தது. இதனை தொடர்ந்து பொது மக்கள் தெருக்களில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்த போது இருசக்கர வாகனத்தில் வரும் மர்ம நபர் ஒருவர் ஹாயாக வந்து பட்டப்பகலில் தெருக்களில் வீடுகள் முன்பு அமைக்கப்பட்டு இருக்கும் குடிநீர் குழாய்களில் இருந்து நல்லிகளை திருடி செல்வது தெரியவந்தது. இதையெடுத்து அக்கிராம மக்கள் அந்த மர்ம நபரை கண்காணித்து பிடிக்க
வேண்டும் என்று முடிவு செய்து காத்து இருந்தனர். அதன் படி இன்று மதியம் அந்த கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் முன்பு இருந்த குடிநீர் குழாயில் நல்லியை திருட முயன்ற போது பொதுமக்கள் சுற்றிவளைத்து பிடித்துள்ளனர். மேலும் கோவில்பட்டி கிழக்கு காவல்நிலையத்திற்கும் தகவல் கொடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து போலீசார் அந்த நபரை பிடித்துவிசாரணை நடத்தி வருகின்றனர். நல்லி திருடிய நபர் சிவன் என்பது மந்திதோப்பினை சேர்;ந்தவர் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருவதும் தெரியவந்துள்ளது. நல்லிகளை திருடி பழைய இரும்பு பொருட்கள் வாங்கும் இடத்தில் விற்று பீடி வாங்கியதாகவும், பீடி வாங்குவதற்காக தான் நல்லிகளை திருடியதாக கூறியதாக போலீசார் கூறுகின்றனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.பீடி வாங்குவதற்காக நல்லிகளை திருடியவரை கண்காணித்து பொது மக்கள் பிடித்து போலீசாரிடம் பிடித்து கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.