
முன்னாள் முதல்வரும்,அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமிகுறித்து அவதூறு பரப்பியதாக யூடியூபர் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து ஓராண்டுக்கு முன் யூடியூபர் திவ்யா சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதுதொடர்பாக 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்நிலையில், சென்னை 11வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஜூன் 26 அன்று ஆஜராக வேண்டும் என திவ்யாவுக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது.