
கர்நாடக மாநிலம் பெல்காமில் நேற்று (ஏப்.9) வளர்ப்பு நாய் கடித்து, அதன் உரிமையாளர் உயிரிழந்துள்ளார். பைலஹோங்கலைச் சேர்ந்த சிவசங்கர் என்பவர் ஒரு மாதத்திற்கு முன்பு, தனது வளர்ப்பு நாயுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது அது தவறுதலாக அவரைக் கடித்துவிட்டது. இந்த நாய்க்கு விஷ எதிர்ப்பு ஊசி போடப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், சிவசங்கர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த நாயை 6 மாதங்களுக்கு முன்பு வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.