
காதலன் திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்ததால் 19 வயது பெண்மணி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சோகம் உத்திரபிரதேசத்தில் நடந்துள்ளது. அங்குள்ள ஷாகாரன்பூர் பகுதியில் வசித்து வரும் பிரீத்தி இளைஞர் ஒருவரை காதலித்து வந்தார். காதலர் திருமணம் செய்ய மறுத்ததால் விரக்தியடைந்த பெண்மணி மாம்பழ மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த விஷயம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.