
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்துள்ளார். தமிழகத்திற்கு வருகை தரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை குருமூர்த்தியை சந்திக்க உள்ளார். இந்நிலையில், மயிலாப்பூரில் உள்ள ஆடிட்டர் குருமூர்த்தி இல்லத்திற்கு சென்ற அண்ணாமலை, அவருடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். பாஜக - அதிமுக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாக கூறப்படும் நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.