Advertiment
   குய்வர் செயற்கைக்கோள் வானிலை சரியில்லாத காரணத்தினால் ஏவுவதை யுனைடெட் லாஞ்ச் அலைன்ஸ் தள்ளி வ.      இஸ்ரேலிய வான்வழி தாக்குதலின் காரணமாக குழந்தைகள் உட்பட 29 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்..      குஜராத் அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.      சமண மதத்தின் 24 ஆவது தீர்த்தங்கரா் மகாவீரா் ஜெயந்தி இன்று.      சென்னையில் ஆவண தங்கத்தின் விலை சவரனுக்கு 1200 ரூபாய் உயர்வு. .  

தென் வங்கக் கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி.

by Editor

தமிழகம்
தென் வங்கக் கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி.

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 48 மணி நேரத்தில் தென் வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். தென்தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதனால் இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை முதல் வரும் ஏப்.12ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக கடலோரப்பகுதிகள் & அரபிக்கடல் பகுதிகள்:06-04-2025 முதல் 10-04-2025 வரை: எச்சரிக்கை ஏதுமில்லை.

06-04-2025 மற்றும் 07-04-2025: அந்தமான் கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

08-04-2025: தெற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

09-04-2025 மற்றும் 10-04-2025: எச்சரிக்கை ஏதுமில்லை.மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Share via