
உத்தரப் பிரதேசத்தில் கங்கை நதியின் நீர் மட்டம் அதிகரித்து பல வீடுகளில் புகுந்துள்ள சம்பவம் மக்களை அவதிக்கு உள்ளாகியுள்ளது. இந்த நிலையில், வீட்டு வாசலில் தேங்கி நிற்கும் கங்கை நீருக்கு ஒரு காவல்துறை அதிகாரி ரோஜாபூவை நீரில் போட்டு பாலை ஊற்றி சுலோகங்கள் சொல்லி வழிபாடு செய்யும் வீடியோ பூஜை செய்யும் காணொளி வெளியாகி சமூக ஊடகங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீர்மட்டம் தொடர்ந்து உயரும் நிலையில், அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.