
2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத்தேர்தல் களம் எப்படி அமையுமென்று யாராலும் கணிக்கமுடியாத நிலையில் இன்றைய அரசியல் களம் உள்ளது.யார் யாருடன் கூட்டணி என்பது இன்னும் முடிவாகாதநிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் மக்களை தேடி சென்று தேர்தல் அல்லாத பிரச்சாரங்களை தொடங்கியுள்ளனர்.இதனைத் தொடர்ந்து நாளை ஆகஸ்ட் 3 ம் தேதி முதல் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ என்ற பெயரில் தேமுதிக நிர்வாகிகள், பொதுமக்களை மாநிலம் முழுவதும் பிரேமலதா விஜயகாந்த் சந்திக்கிறார்.