
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள சுப்புலாபுரம் பகுதியைச் சார்ந்த போக்சோ குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் ரூபாய் 5000 அபராதமும் விதித்து தென்காசி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூர் காவல் சரகம் சுப்புலாபுரம் வடக்கு தெருவை சேர்ந்த சுந்தரராஜ் என்பவரது மகன் வைரமுத்து தனது மகள் 17 வயது சிறுமியை காணவில்லை என்று கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலையத்தில் கடந்த 27. 01 .2018 ஆம் தேதி கொடுத்த புகார் மனுவின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
போலீசார் நடத்திய விசாரணையில் மேலமரத் தோணி பகுதியை சேர்ந்த பரமசிவன் என்பவரது மகன் சுரேஷ்குமார் (வயது 20/2018) என்பவர் வைரமுத்து என்பவரது மகள் சிறுமியை பைக்கில் வலுக்கட்டாயமாக ஏறு ..என்று சொல்லி பேசி மிரட்டி கடத்திச் சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து கரிவலம்வந்தநல்லூர் போலீசார் சுரேஷ்குமாரை போக்சோ வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தென்காசி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி பி.ராஜவேலு முன்பாக விசாரணை நடைபெற்றது.இந்த வழக்கின் விசாரணையில் குற்றம் நிருபிக்கபட்டதால் போக்சோ குற்றவாளி சுரேஷ் குமாருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூபாய் 5000 அபராதமும் விதிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் பி.குட்டி என்ற மருதப்பன் ஆஜராகி வாதாடினார்.