Advertiment

தென்காசியில் 4 குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு.

by Staff

தமிழகம்
தென்காசியில் 4 குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை காவல் நிலைய கஞ்சா வழக்கு குற்றவாளியான சுந்தரபாண்டியபுரம் சுடலை மணிகண்டன், பாவூர்சத்திரம் காவல் நிலைய கொலை முயற்சி மற்றும் ஆயுத தடை சட்ட வழக்கின் குற்றவாளியான  எல்லைப்புளி பாலாஜி,  புளியங்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கின் குற்றவாளிகளான ராமர்,அய்யாபுரம்  செல்லசாமி ஆகிய 4 பேர்  மீது பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த்  பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர்  உத்தரவின் பேரில் மேற்படி நான்கு நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Share via