
சென்னையை அடுத்த செம்பரம்பாக்கம் ஏரியில் உள்ளாடையுடன் எலும்புகூடு ஒன்று கிடந்ததைப் பார்த்த அப்பகுதியினர், உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், எலும்புகூடை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், எலும்புகூடின் பல்லில், கிளிப் போடப்பட்டு இருந்ததால், அதனை ஆதாராமாக வைத்து, இறந்தது யார்?, கொலையா? அல்லது தற்கொலையா? என்பதை கண்டறிய போலீசார் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர்.