
பாலியல் வன்கொடுமை வழக்கில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என பெங்களூரு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், தண்டனை விபரங்கள் நாளை அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டில் வேலை பார்த்து வந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ரேவண்ணா மீது 2024ல் புகார் அளிக்கப்பட்டது. சிறப்பு நீதிமன்றத்தில் துரித விசாரணை நடந்து குற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளது.