Advertiment

அதிமுக ஆட்சி வந்தவுடன் நிறுத்தப்பட்ட திட்டங்கள் மீண்டும் செயல்படுத்தப்படும்-எடப்பாடி பழனிச்சாமி. 

by Staff

தமிழகம்
அதிமுக ஆட்சி வந்தவுடன் நிறுத்தப்பட்ட திட்டங்கள் மீண்டும் செயல்படுத்தப்படும்-எடப்பாடி பழனிச்சாமி. 

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் உள்ள தேரடி முன்பு மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பரப்புரை மேற்கொண்டார்.

எடப்பாடி பழனிச்சாமி பிசியாதாவது:

நான் உங்களைப் போல் விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவன். விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளிகளின் ஆதரவு இறங்கியதால் தான் விவசாய குடும்பத்தில் இருந்த நான் முதல்வராக வந்தேன். 2026ல் அதிமுக ஆட்சி அமையும் அப்போது விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு அனைத்து திட்டங்களும் வழங்கப்படும்.

விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு திட்டத்தில் அதிகளவு நீதி பெற்றுத் தந்தது அதிமுக ஆட்சிதான்.ஐந்து ஆண்டுகளில் விவசாயிகள் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்தது அதிமுக தான்.

 குடிமராமத்து திட்டத்தில் கண்மாயிகள் தூர் வாரும் பணிகளை அதிமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் திமுக ஆட்சி அமைந்ததும் குடிமராமத்து பணித்திட்டம் கைவிடப்பட்டது.அதிமுக ஆட்சி அமைந்ததும் குடிமராமத்து பணி திட்டத்தில் நீர்நிலைகள் தூர்வாரப்படும். அதில் எடுக்கப்படும் வண்டல் மண் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும்.வீடு இல்லாத ஏழை மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அதிமுக சார்பில் இடம் வாங்கி அதில் அற்புதமான காங்கிரிட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும்.

அதிமுக ஆட்சி அமைந்த உடன் மீண்டும் கறவை பசு ஆடு கோழிகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
சேலம் ஆத்தூரில் ஆயிரம் கோடி மதிப்பீட்டு கால்நடை ஆராய்ச்சி நிலையம் பூங்கா கட்டி முடிக்கப்பட்டது. மிகப்பெரிய கால்நடை ஆராய்ச்சி நிலையம் பூங்காவை செயல்படுத்தாமல் அப்படியே கிடப்பில் போட்டுவிட்டது.

சட்டமன்றத்தில் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்திய காரணத்தால் அங்கு ஸ்டிக்கர் ஒட்டி அதனை திறந்து வைத்து விட்டனர். இந்த கால்நடை ஆராய்ச்சி பூங்காவில் கலப்பின பசுக்கள் உருவாக்கி நமது சீதோசன நிலைக்கு ஏற்ற அதனை வளர்த்து ஒரு நாளைக்கு 40 லிட்டர் பால் வழங்க ஏற்பாடு செய்திருந்தோம். அதிமுக ஆட்சி அமைந்த உடன் கால்நடை ஆராய்ச்சி பூங்கா செயல்படுத்தப்பட்டு பெண்களுக்கு கறவை பசுக்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.இதன் மூலம் கிராம மக்களின் வாழ்க்கை மேம்படும்.

அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை நிறுத்திவிட்டனர். மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்த பின்னர் தாலிக்கு தந்த திட்டம் கொண்டு வரப்படும். அதிமுக ஆட்சியில் அரசு பள்ளிகளில் படித்த மாணவ மாணவிகள் 62,35000 பேருக்கு லேப் டாப் கொடுத்தோம். அதையும் திமுக அரசு நிறுத்தி விட்டது. அதையும் அதிமுக ஆட்சி வந்ததும் அமல்படுத்தப்படும்.

கொரோனா பெருந்தொற்று காலத்திலும் விலைவாசி உயராமல் பார்த்துக்கொண்டோம். ஆனால் திமுக ஆட்சியில் விலைவாசி கட்டியாக உயர்ந்துவிட்டது. இதற்கெல்லாம் விடிவு காலம் 2026ல் கிடைக்கும்.
தேர்தலின் போது திமுக கொடுத்த 525 வாக்குறுதிகளில் 10% கூட நிறைவேற்ற வில்லைகேஸ் சிலிண்டர் கான மானியம் நூறு ரூபாய் கொடுக்கவில்லைபடித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்று தர முடியவில்லை.

படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்று தர முடியவில்லை,தமிழகத்தில் 5 லட்சம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தனர். ஆனால் இதுவரை 50,000 காலி பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டு உள்ளன என சட்டமன்றத்தில் தெரிவிக்கின்றனர்.
இவர்கள் நியமித்தது 50000 பேர். ஏற்கனவே காலி பணியிடங்கள் ஐந்தரை லட்சம். இவர்கள் ஆட்சியில் ஓய்வு பெற்றோர் எண்ணிக்கை 75,000. இப்படிப்பட்ட ஆட்சி நமக்கு வேண்டுமா...?கடந்த 50 மாதத்தில் நான்கு லட்சத்தி 38 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டனர். 

தமிழகத்தை கடங்கார மாநிலமாக மாற்றிவிட்டனர், தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடிமகன்களையும் ஸ்டாலின் கடன்காரன் ஆக்கிவிட்டார்.இன்னும் ஒரு லட்சம் கோடி கடன் வாங்குவதாக அறிவித்துள்ளனர். இதன் மூலம் நாட்டு மக்களை கடங்காரனா ஆக்கியதுதான் இவர்கள் செய்த சாதனை. 

எந்த திட்டத்துக்கும் பணம் இல்லை என்று கூறும் ஸ்டாலின் கார் பந்தயம் நடத்த மட்டும் பணம் இருக்கிறது
 நூற்றுக்கணக்கான கோடி செலவு செய்து கார் பந்தயம் நடத்துகிறார். இது தேவையா
 அவரது தந்தைக்கு நடுக்கடலில் எழுதாத பேனர் வைக்கிறார் அது தேவையா.
 பேனா வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் அவரது நினைவு மண்டபம் ரூ.2 கோடியில் வைக்கலாம். இல்லையென்றால் எழுதும் பேனாக்களை பள்ளி மாணவ மாணவிகளுக்கு கொடுக்கலாம்.
 கருணாநிதி குடும்பத்தில் தனது சொந்த பணத்தை எடுத்து சரித்திரம் கிடையாது. ஆனால் கொடுத்து சிவந்த கைகளுக்கு சொந்தக்காரர் நம்ம வீட்டு தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா..
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையான கட்சி தான் அதிமுக.

 2026 நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தர வேண்டும்.
தைப்பொங்கலுக்கு 2500 ரூபாய் வழங்கினோம்.அதேபோல் விலையில்லாத வேஸ்டி  சேலைகள் வழங்கினோம்,ஆனால் திமுக அரசு வந்த பின்னர் வேட்டி கொடுத்தால் சேலை கொடுப்பதில்லை.. சில இடங்களில் இரண்டையும் தருவதில்லை,நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் வாழைப்பழ காமெடி போல் ஆக்கிவிட்டனர்.

அதிமுக ஆட்சி அமைந்த உடன் தீபாவளி பண்டிகையின் போது அற்புதமான சேலை வழங்கப்படும், ஓட்டப்பிடாரம் மண் தேசியத் தலைவரை உருவாக்கியது,கப்பலோட்டிய தமிழன் வ உ சி ஐயா பிறந்த மண் இது,நான் முதலமைச்சராக இருந்தபோது அவரது முழு உருவ படத்தை சட்டமன்றத்தில் திறந்து வைத்தேன்,தேசத்துக்காக உழைத்த மனிதர்களை அதிமுக என்றும் புகழும், மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்று கோஷமிட்டு பை பை ஸ்டாலின் என்று பேசி தன்னுடைய உரையை முடித்துக் கொண்டார்.

Share via