
ஆடி மாதத்தில் பொதுவாக பத்திரப்பதிவுகள் குறைவாக இருக்கும். ஆனால், ஆடிப்பெருக்கு தினத்தன்று அதிகளவு பத்திரப்பதிவுகள் நடைபெறும். அந்த வகையில், வரும் ஆகஸ்ட்-3ஆம் தேதி, ஆடிப்பெருக்கு என்பதால் அன்றைய தினம் அதிகளவில் பத்திரப்பதிவுகள் நடக்க வாய்ப்புள்ளது. அன்றைய தினம் நடக்கும் பத்திரப்பதிவின் வருமானமும் அதிகமாக இருக்கும். ஆனால்,கடந்த பிப்ரவரி மாதம் 2-ந்தேதி முகூர்த்த நாளன்று பத்திரப்பதிவு அலுவலகங்கள் திறக்கப்படும் என்றும், பொதுமக்கள் அன்றைய தினம் பதிவுகளை மேற்கொள்ளலாம் என்றும் அறிவித்து இருந்தது. ஆனால் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் அன்றைய தினம் பணிக்கு வரவில்லை. எனவே ஞாயிற்றுக்கிழமைகளில் பதிவு வேண்டாம் என்று பத்திரப்பதிவு துறை முடிவு செய்துவிட்டது. அந்த அடிப்படையில்தான் ஆடிப்பெருக்கு நாளன்றும் பதிவுகள் கிடையாது என முடிவு செய்யப்பட்டுள்ளது.