
'தி கேரளா ஸ்டோரி' படத்திற்கு தேசிய விருது அறிவித்ததற்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, “வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக எப்போதும் நல்லிணக்கம் மற்றும் எதிர்ப்பின் கலங்கரை விளக்கமாக நிற்கும் நிலமான கேரளா, தேசிய விருதுக்குழுவின் இந்த முடிவால் கடுமையாக அவமதிக்கப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.