
கேரளாவின் கொல்லத்தில் மனைவி மீது கணவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அச்சன்கோவிலைச் சேர்ந்த ஷெஃபீக் என்பவர் மனைவி ஸ்ரீது மீது நேற்று (ஜூலை 31) பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் இருவருக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. ஷெஃபீக் குடிபோதையில் தகராறு செய்து இந்த பயங்கரத்தை செய்துள்ளார். இவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காதல் திருமணம் செய்த இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.