
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குறித்து தரக்குறைவாக பேசாதீர்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரையில் இன்று (ஆக.01) செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜூ, "ஒரு தலைவரைப் பற்றி பாவமா இல்லையா என்பது போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவது தவறானதாகும். அவர் மூன்று முறை அல்லது நான்கு முறை யாரையாவது சந்திக்கட்டும். அது பற்றி எல்லாம் இப்போது பேசுவதற்கு இல்லை" என்று காட்டமாக பதிலளித்துள்ளார்.