
இந்த ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு மூன்று மாத கால தூய்மை பிரச்சாரத்தை மதுரை கோட்டர் ரயில்வே நிர்வாகம் துவக்கி உள்ளது. முதல் கட்டமாக வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 1) முதல் ஆகஸ்ட் 15 வரை ரயில் நிலையங்கள், ரயில்வே வளாகங்கள், ரயில் பாதைகள் ஆகியவற்றில் உள்ள குப்பைகளை அகற்றும் பணிகள் நடைபெறும். இரண்டாவது கட்டமாக ஆகஸ்ட் 16 முதல் அக்டோபர் 31 வரை ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்வே அலுவலகங்கள் ஆகியவற்றில் தொடர்ந்து தூய்மை பராமரிப்பு பணிகள் நடைபெறும். இந்த தூய்மை பிரச்சாரத்தின் துவக்க நாளான இன்று தூய்மை பிரச்சார உறுதிமொழி எடுக்கப்பட்டது. மதுரை கோட்ட அலுவலகத்தில் கோட்ட ரயில்வே மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா உட்பட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தூய்மை பிரச்சார உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் விரைவு சக்தி முதன்மை திட்ட மேலாளர் கே. ஹரிகுமார், முது நிலை கோட்ட இயந்திரவியல் பொறியாளர் முகமது ஜுபீர், கோட்ட சுற்றுச்சூழல் மேலாளர் குன்டேவார் பாதல், கோட்ட ஊழியர் நல அதிகாரி டி.சங்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.