Advertiment
   அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

அதிமுக எம்எல்ஏ.,க்கள் தாமாகவே  வெளியேறினர்: சபாநாயகர் அப்பாவு விளக்கம்

by Editor

Main news
அதிமுக எம்எல்ஏ.,க்கள் தாமாகவே  வெளியேறினர்: சபாநாயகர் அப்பாவு விளக்கம்


சென்னை கலைவாணர் அரங்கில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை மீண்டும் விசாரிக்கும் விவகாரம் தொடர்பாக அதிமுக எம்.எல்.ஏ.,க்கள எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், பொய் வழக்கு போடும் திமுக.,வை கண்டிப்பதாக பதாகை ஏந்தி அமளியில் ஈடுபட்டனர். பின்னர், அவையில் இருந்து வெளிநடப்பு செய்த அதிமுக எம்எல்ஏ.,க்கள் சட்டசபை வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டதுடன்,  கூட்டத்தொடரை புறக்கணிப்பதாக அறிவித்தன.
இந்நிலையில், சட்டசபையில் இருந்து அதிமுக.,வினர் வெளியேற்றப்பட்டதாகக் கூறப்பட்டது. இது குறித்து சபாநாயகர் அப்பாவு, சட்டசபையில் விளக்கமளித்தார்.
அவர் பேசியதாவது: அதிமுக எம்எல்ஏ.,க்களை சட்டசபையிலிருந்து வெளியேற்ற நான் உத்தரவிடவில்லை. தாமாகவே அவர்கள் வெளியேறினர். என் அனுமதி பெறாமல் அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் பதாகையை ஏந்தி கூச்சலிட்டனர். மக்கள் பிரச்னையை பேசும் சபையில் தனிப்பட்ட பிரச்னைகளை எழுப்பக்கூடாது. எனினும் அவர்களின் தனிப்பட்ட பிரச்னையை பேச நான் அனுமதித்தேன். இவ்வாறு அவர் விளக்கமளித்தார்.

Share via