Advertiment

இன்று உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்.....

by Admin

விளையாட்டு
இன்று உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்.....

இன்று உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது இந்திய அணியும் ஆஸ்திரேலியா அணியும் மோதுகின்றன இதன் காரணமாக வேளச்சேரி சிந்தாதிரிப்பேட்டை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

 இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இரண்டாம் கட்ட சோதனைக்காக 300 மேற்பட்ட ஊழியர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர் .உலகக் கோப்பை கிரிக்கெட் என்பதனால் கடுமையான கட்டுப்பாடுகளுடன் ரசிகர்களை உள்ளே அனுப்புவதற்கான ஏற்பாடுகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன

. இன்று சரியாக 2:00 மணியளவில் போட்டி ,தொடங்குகிறது. தொடர்ச்சியாக பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று கோப்பைகளை வென்று வரும் இந்திய அணி இந்த உலகக் கோப்பையில்ஆஸ்திரேலியாவை வீழ்த்தி முன்னேற வேண்டும் என்று இந்திய ரசிகர்  ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். பொதுவாகவே, ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் போட்டிகளில் இந்திய அணி தொடர்ச்சியாக வெற்றி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

Share via
Advertiment
Ads