உத்தரபிரதேசம் லக்னோவில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஏகனா மைதானத்தில் நடந்தது. டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆடிய லக்னோ அணி 18.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 141 ரன்களை எடுத்தது. அடுத்து ஆட வந்த டெல்லி கேப்பிட்டல் அணி 17 .1 ஓவரில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்து அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.