Advertiment

சி.எஸ்.கே அணியின் முதல் ஆல் ஆஃப் ஃபேம் விருதுகள்

by Admin

விளையாட்டு
 சி.எஸ்.கே அணியின் முதல் ஆல் ஆஃப் ஃபேம் விருதுகள்

சேப்பாக்கம் மைதானத்தில் ரோப் 2026 என்ற பெயரில் சிஎஸ்கே அணியின் இந்நாள் மற்றும் முன்னாள் வீரர்கள் பங்கேற்ற ரியூனியன் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்களான சுரேஷ் ரெய்னா மேத்தியோ ஹெய்டன், மைக்கேல் ஹசி, டு வைன் பிராவோ, முத்தையா முரளிதரன், முரளி விஜய் ,எஸ், பத்ரிநாத்,  ராயிடு உள்ளிட்டோர் ஓ. ஜி .சூப்பர் கிங்ஸ் அணியாக பங்கேற்றனர். கேப்டன் ருத்ராஜ் கெக்குவாட் தலைமையில் எம். எஸ் .தோனி, சிவம் துபே , சாம்சன் உள்ளிட்ட தற்போதைய வீரர்களும் கலந்து கொண்டனர். முன்னாள் வீரர்களுக்கும் தற்போதைய சி.எஸ்.கே அணிக்கும் இடையே ஜாலியான கண்காட்சி போட்டிகள் மற்றும் சிக்ஸர் அடிக்கும் போட்டிகள் நடைபெற்றன. சி.எஸ்.கே அணியின் முதல் ஆல் ஆஃப் ஃபேம் விருதுகள் சுரேஷ் ரெய்னா மற்றும் மேத்யூ ஹெய்டன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இதன் சிகரமாக இசையமைப்பாளர் ஏ .ஆர். ரகுமானின் இசை கச்சேரியும் நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு பங்கேற்பும் விழாவிற்கு சிறப்பாக அமைந்தன.

Share via

More Stories