இன்று ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் ஜவ்வாய் மேன்சிங் கிரிக்கெட் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ்அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. களம் இறங்கி ஆடப் புகுந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 17.5 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 118 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடப் புகுந்த குஜராத் டைட்டன்ஸ் அணி 119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் களமிறங்கியது. 13.5 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 119 ரன்களை எடுத்து குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது. ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ்அணியை வீழ்த்தியது