Advertiment

தமிழக வீரர் நடராஜன் ஐபிஎல் தொடரிலிருந்து திடீர் விலகல்:

by Editor

தமிழக வீரர் நடராஜன் ஐபிஎல் தொடரிலிருந்து திடீர் விலகல்:

தமிழக வீரரும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம்பெற்றிருந்த வருமான நடராஜன் ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார். நடராஜனுக்கு முழுங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் ஐபிஎல் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார், அவர் சிகிச்சைக்காக பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடெமிக்கு செல்ல உள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நடப்பு ஐபிஎஎல் டி20 சீசனில் சன்ரைசர்ஸ் அணியில் 2 ஆட்டங்களில் மட்டுமே நடராஜன் விளையாடியிருந்தார். கடந்த சில நாட்களுக்குமுன் பேட்டி அளித்த சன்ரைசர்ஸ் கேப்டன் டேவிட் வார்னர், ஆலோசகர் விவிஎஸ் லட்சுமண் ஆகியோர் நடராஜன் விரைவில் குணமாகிவிடுவார் என நம்பிக்கை தெரிவித்திருந்தனர். ஆனால், முழங்கால் காயத்திலிருந்து முழுமையாக நடராஜன் குணமாகவில்லை என்பதால் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

Share via