Advertiment

இதய சிகிச்சை முடிந்தது:  முரளிதரன் டிஸ்சார்ஜ்

by Editor

இதய சிகிச்சை முடிந்தது:  முரளிதரன் டிஸ்சார்ஜ்



இதய கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முத்தையா முரளிதரன்  டிஸ்சார்ஜ் ஆவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன் தற்போது சன்ரைஸர்ஸ் அணி உள்ளிட்டவற்றிற்கு பயிற்சியாளராகவும் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் சமீபத்தில் இதய கோளாறால் பாதிக்கப்பட்ட முத்தையா முரளிதரன் உடனடியாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு அங்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் தற்போது நலமுடன் உள்ளதாகவும்,  அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

Share via