சாத்தான்குளம் காவல் நிலையத்தில் செல்போன் கடை நடத்திய தந்தை மகன் இருவரையும் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து இரவு முழுவதும் அவர்களை அடித்து துன்புறுத்தி காவல்துறையினர் அடித்துக் கொன்றதாக தொடரப்பட்ட வழக்கில் ஒன்பது காவல்துறையினரும் குற்றம் செய்தவர்கள் என்று மதுரை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளாக வழக்கு நடந்து வந்த நிலையில் ,இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வரும் 30-ஆம் தேதி தண்டனை குறித்த விவரங்களை அறிவிக்க உள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.