Advertiment

ஹோர்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம்

by Admin

உலகம்
ஹோர்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம்

ஹோர்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. 

தனது கட்டுப்பாட்டைப் பயன்படுத்தி, ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு ஈரான் 2 மில்லியன் டாலர் (சுமார் ₹17-18 கோடி) வரை கட்டணம் வசூலிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பாதுகாப்பு வரி என்ற பெயரில் இந்தத் தொகை வசூலிக்கப்படுவதாக ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

 அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுக்கு 48 மணி நேரக் கெடுவை விதித்தார். இந்த நேரத்திற்குள் ஹோர்முஸ் ஜலசந்தியை முழுமையாகத் திறக்காவிட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.
ஈரானின் மின் உற்பத்தி நிலையங்களை), குறிப்பாக மிகப்பெரிய நிலையங்களை"முற்றிலுமாக அழித்துவிடுவோம்என்று டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதற்குப் பதிலடி கொடுத்துள்ள ஈரான், தனது எரிசக்தி உள்கட்டமைப்புகள் தாக்கப்பட்டால், பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மற்றும் அமெரிக்கப் பங்குகளைக் கொண்ட நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும், ஜலசந்தியை முற்றிலும் மூடிவிடுவோம் என்றும் எச்சரித்துள்ளது. 

இந்தச் சூழலால் கச்சா எண்ணெய் விலை உலகளவில் கடுமையாக உயர்ந்து வருவதுடன், சர்வதேசப் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சமும் நிலவுகிறது. 

Share via

More Stories