Advertiment

எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் அளிக்கும் ஆதரவை எதிர்க்கும் முகமாகசிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பு

by Admin

இந்தியா
எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் அளிக்கும் ஆதரவை எதிர்க்கும் முகமாகசிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பு

எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் அளிக்கும் ஆதரவை எதிர்க்கும் முகமாக இந்தியா பாகிஸ்தான் உடனான 1960 ஆம் ஆண்டு சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்துள்ளது. நம்பகமான மற்றும் மாற்ற முடியாத வகையில் பாகிஸ்தான் பயங்கரவாத தாக்குதலை நிறுத்தும் வரை இந்த ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படும் என இந்திய அறிவித்துள்ளது. ஒப்பந்தம் நிறுத்தப்பட்டதை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் உள்ள சலால் மற்றும் பக்ளிகார் போன்ற நீர்மின் திட்டங்களில் படிந்துள்ள மண்டல் மண்ணை அகற்றும் பணிகளை இந்தியா தொடங்கியுள்ளது. இந்தப் பணிகளை மேற்கொள்ள பாகிஸ்தான் முன்பு எதிர்ப்பு தெரிவித்து வந்தது. நீண்ட காலமாக தடைபட்டிருந்த பணிகள் இப்பொழுது முழு வீச்சில் நடைபெற தொடங்கியுள்ளன. இது குறித்து மார்ச் 2026 ஐக்கிய நாடுகள் சபையில் பேசிய இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பி .ஹரிஷ் பயங்கரவாதத்தின் உலகளாவிய மையமாக பாகிஸ்தான் இருக்கும் வரை ஒப்பந்தம் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்படும் என்று உறுதிபட தெரிவித்து இருந்தார். இந்த ஒப்பந்தம் நிறுத்தப்படுவதின் மூலம் சிந்து ,ஜீலம் மற்றும் செனாப் ஆகிய மேற்கிந்திய நதிகளின் நீரை இந்தியா தனது தேவைகளுக்கு பயன்படுத்தும் அல்லது  திருப்பிவிடவோ வழி ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானின் விவசாயம் மற்றும் மின்சார உற்பத்தியில் இதன் மூலம் பெறும் பாதிப்பு உருவாகி உள்ளது.

Share via

More Stories