Advertiment

ஐந்து நாள் போர் நிறுத்தம்- அமொிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்

by Admin

உலகம்
 ஐந்து நாள் போர் நிறுத்தம்- அமொிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்

ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள் கட்டமைப்புகள் மீது திட்டமிடப்பட்டிருந்த தாக்குதல்களை அடுத்த ஐந்து நாட்களுக்கு ஒத்தி  வைக்க அமொிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். கடந்த இரண்டு நாட்களாக ஈரானுடன் மிகவும் நல்ல மற்றும் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகள் நடந்ததாகவும் அதன் விளைவாகவே இந்த ஐந்து நாள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதாகவும் அவர் தனது ட்ரூத் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். ஈரானின் ஹார்முஸ் ஜல சந்தியை மீண்டும் திறப்பது மற்றும் ஒரு முழுமையான அமைதி உடன்படிக்கையை எட்டுவது தொடர்பான ஆலோசனைகள் நடந்து வருகின்றன. இந்த ஐந்து நாள் கால அவகாசம் தற்போது நடைபெற்று வரும் பேச்சு வார்த்தைகளின் வெற்றியை பொருத்தே அமையும் என்றும் வாரம் முழுவதும் இந்த உரையாடல்கள் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார் .இருப்பினும், அமெரிக்காவுடன் நேரடி பேச்சு வார்த்தை எதையும் தாங்கள் நடத்தவில்லை என்றும்  இந்த அறிவிப்பு எரிசக்தி விலைகளை குறைப்பதற்கான ஒரு முயற்சி என்றும் ஈரானிய வெளியுறவு அமைச்சகம் இதனை மறுத்து உள்ளது.

Share via

More Stories