அரபு நாடான கத்தாரில் ஏற்பட்ட இராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. உயிரிழந்த ஆறு பேரில் கத்தார் ஆயுதப்படையைச் சேர்ந்தவர்கள் கத்தார்- துருக்கி கூட்டுப்படை வீரர் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களும் அடங்குவர். விபத்தின் போது மாயமான ஒருவரை தேடும் பணியில் சிறப்பு மேற்கு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் .இந்த விபத்து கத்தாரின் கடல் எல்லைக்குள் நிகழ்ந்துள்ளது.