சோனியா காந்தி- ராகுல் காந்தி மீது அமலாக்க துறையால் தாக்கல் செய்யப்பட்ட நேஷனல் ஹெரால்டு பண மோசடி வழக்கில் டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அமலாக்கத்துறை தனது புகாரை பா.ஜ.க கட்சி தலைவர் சுப்ரமணியசாமி தாக்கல் செய்த ஒரு தனிப்பட்ட புகாரின் அடிப்படையில் பதிவு செய்திருந்தது. பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் ஒரு வழக்கை விசாரிக்க முதலில் ஒரு முதன்மை குற்றம் தொடர்பான முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் .அந்த சட்ட விதிகளின்படி அமலாக்க துறையின் தற்போதைய புகார் சட்டப்படி செல்லாது என்று நீதிமன்றம் கருதியது ..நீதிமன்றம் அமலாக்க துறையின் புகாரை விசாரணைக்கு ஏற்க மறுத்து விட்டதால், சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீதான குற்றச்சாட்டுகள் இன்னும் விசாரணை செய்யப்பட்டு நிரூபிக்கப்படவில்லை என்று தீர்ப்பு வழங்கப்படவில்லை. டெல்லி காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு தற்போது இந்த விவகாரத்தில் ஒரு புதிய முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது. எனவே, அமலாக்கத்துறை இந்த புதிய எஃப். ஐ. ஆர் அடிப்படையில் தனது விசாரணையை தொடரலாம் அல்லது மேல் முறையீடு செய்யலாம் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.