தமிழக முதல்வர் மு .க. ஸ்டாலினை ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ. சண்முகமும் அண்ணா அறிவாலயத்தில் இன்று சந்தித்து மது ஒழிப்பு நடை பயணத்திற்கான அழைப்புகளை வழங்கினர். ஜனவரி 2=ஆம் தேதி திருச்சியில் தொடங்கும் ம.தி.மு.க .சமத்துவ நடை பயணத்தை தொடங்கி வைக்க முதலமைச்சர் க்கு வைகோ அழைப்பு விடுத்தார். முதலமைச்சரும் இந்த அழைப்பை ஏற்றுக் கொண்டார் .இந்நிகழ்வை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ தமிழகத்தில் தி.மு.க தலைமையிலான அரசு மீண்டும் பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கும் என்றும் கூட்டணி அரசு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் திட்ட ஓட்டமாக தெரிவித்தார். பா.ஜ.க மற்றும் சங் பரிவார அமைப்புகள் தமிழகத்தில் காலூன்ற அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர் உறுதிப்பட கூறினார்.