இன்று ஜோர்டான் அம்மான் நகரில் உள்ள ஹுசைனியா அரண்மனையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா இப்ன் அல் ஹுசைனியா இருவரும் சந்தித்து இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய உலகளாவிய பிரச்சனைகள் குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர். .இது ஒரு இந்திய பிரதமரின் ஜோடானுக்கான முதல் முழுமையான இருதரப்பு பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.. இரு நாடுகளுக்கும் இடையே ராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டு 75-வது ஆண்டு நிறைவை கொண்டாடும் இந்த சந்திப்பு இரு தரப்பு ஈடுபாட்டிற்கு ஒரு புதிய ஒத்து வேகத்தை அளிக்கும் .. ஜோர்டான் இந்தியாவுக்கு உரம் வழங்கும் முக்கிய நாடாக இருப்பதால் பாஸ்பேடிக் உரங்களுக்கான இந்தியாவின் வளர்ந்து வரும் தேவையை பூர்த்தி செய்ய ஜோர்டானில் மேலும் முதலீடு செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது .ஜோடானின் டிஜிட்டல் கட்டண முறைக்கும் இந்தியாவின் யு .பி .ஐ க்கும் இடையே ஒத்துழைப்புக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார் .இந்த துறைகளில் ஒத்துழைப்பை ஆளப்படுத்த ஒப்புக்கொள்ளப்பட்டது. பயங்கரவாதம், தீவிரவாதம் மற்றும் அடிப்படை வாதத்திற்கு எதிரான உறுதியான நிலைப்பாட்டை இரு தலைவர்களும் மீண்டும் உறுதிப்படுத்தினர். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு ஜோடான் தனது வலுவான ஆதரவை தெரிவித்தது .பாதுகாப்பு மற்றும் தீவிரமயமாக்கல் எதிர்ப்பு ஆகியவற்றில் ஈடுபாட்டை மேலும் ஆழ ப்படுத்த ஒப்புக் கொள்ளப்பட்டது.. காசா தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்தும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டன. அருகில் உள்ள நாடுகளின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பது முக்கியத்துவத்தை வலியுறுத்தி, நீடித்து அமைதியை அடைவதற்கான முயற்சிகளுக்கு இந்தியாவின் ஆதரவை பிரதமர் மோடி மீண்டும் உறுதிப்படுத்தினார் .இந்த சந்திப்புகளின் விளைவாக கலாச்சாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, நீர் மேலாண்மை மற்றும் டிஜிட்டல், பொது உள்கட்டமைப்பு போன்ற துறைகளில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் உறுதி செய்யப்பட்டன.