இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லியில் இருந்து வேலூருக்கு வருகிறார். வேலூரில் பாஜக கட்சி நிர்வாகிகளுடன் தேசிய ஜனநாயக கூட்டணியை வலுப்படுத்துதல் மற்றும் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனையில் ஈடுபட உள்ளார். ஆலோசனை கூட்டத்தில் கூட்டணி விரிவாக்கம், தொகுதி பங்கீடு, ஓ பன்னீர்செல்வம் ,டி டி வி தினகரன் போன்றோரை கூட்டணியில் சேர்ப்பது குறித்தும் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இன்று இரவு அவர் சென்னையில் தங்கி ,நாளை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பிற கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து பேச உள்ளதாகவும் தகவல். 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் அமித் ஷாவின் தமிழக வருகை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. நேற்று அமித்ஷாவுடன் தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் நைனார் நாகேந்திரன் சந்தித்து ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.