கால்பந்தாட்ட ஜாம்பவான் ஜோனல் மெஸ்ஸி தனது கோட் இந்தியா டூர் 2025. இறுதி கட்ட நிகழ்வில் கலந்து கொள்ள மும்பையில் இருந்து கால தாமதமாக விமானத்தில் டெல்லி வந்தடைந்தார். அவருக்கு டெல்லி அருஞ்சேட்லி மைதானத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தன மைதானம் முழுவதும் மெஸ்ஸி மெஸ்ஸி என்கிற கரகோஷங்கள் உற்சாகம் பீறிட ... எங்கும் எதிரொலித்தது. மெசியுடன் அவரது இண்டர் மியாமி அணி வீரர்களான லூயிஸ் சுவாரஸ் மற்றும் ரோட் ரிகோ டிபால் ஆகியோரும் வந்திருந்தனர். குறிப்பிட்ட பிரமுகர்கள் மட்டுமே அவரை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் இடையே அவர் சிறுவர்களுடன் மைதானத்தில் கால்பந்தாட்டம் ஆடினார். ஐசிசி தலைவர் ஜெய்ஷா டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா ஆகியோ மெஸ்ஸியை சந்திப்பதற்கு வந்திருந்தனர். ஜெய்ஷா மெஸ்ஸிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சியையும் கையெழுத்திட்ட கிரிக்கெட் பேட்டை பரிசாக வழங்கினார்.மெஸ்ஸியை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், சந்தித்தனர். பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பதாக இருந்த நிகழ்வு மாற்றப் பட்டது. இந்நிகழ்வை தொடர்ந்து கொல்கத்தா ஹைதராபாத் மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் உள்ளடக்கி அவரது மூன்று நாள் இந்திய பயணம் இன்றுடன் முடிந்தது.