பாமக கௌரவ தலைவர் ஜிகே மணி பரபரப்பாக அளித்த பேட்டியில், ராமதாசும் அன்புமணியும் மீண்டும் ஒன்றாக இணைந்தால் நான் பாமக கட்சியை விட்டு வெளியேறத் தயார் ஏன் எனது எம்எல்ஏ பதவியை கூட ராஜினாமா செய்வேன்என்று தெரிவித்தார். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவன ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே ஏற்பட்டுள்ள பிளவுக்கு ஜி.கே மணி தான் காரணம் என்று அன்புமணி தரப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர் .தன்னை துரோகி என்று அன்புமணி குறிப்பிட்டது மிகுந்த வேதனை அளித்ததாக ஜி கே மணி கூறியுள்ளார். தான் யாருக்கும் எந்த துரோகம் செய்யவில்லை என்றும் அன்புமணியின் செயல்பாடுகளால் ராமதாஸ் வருத்தத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் .தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான பிரச்சனைகள் பேசி தீர்க்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் மீண்டும் இணைந்தால் தான் கட்சியை விட்டு விலக தயார் என்றும் வேறு எந்த கட்சியிலும் சேர மாட்டேன். வீட்டில் இருப்பேன் என்றும் உறுதி படத் தெரிவித்துள்ளார் .ராமதாஸ் அன்புமணி சமரசம் ஆகிவிட்டால் தான் மட்டுமல்ல, தனது குடும்பத்தினரும் கட்சியில் இருக்க மாட்டார்கள் என்றும் எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்ய தயார் என்றும் கூறியுள்ளார்.